பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ் பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, செவ்வாய்க்கிழமை (22) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
ஹெரோ கீழ் பிரிவில் கட்டப்படும் கட்டடம் ஒன்றுக்கு சென்ற, கொங்ரீட் கலவை இயந்திர வண்டி பாதையை விட்டு விலகி, மற்றொரு கொங்ரீட் கலவை இயந்திர வண்டியின் மீது விழுந்துள்ளது.
ஒரு கொங்ரீட் வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில்
, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்