காசாவில் தரைவழியிலும் உக்கிர தாக்குதல்; செத்து மடியும் மக்கள்!!

காசாவில் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தற்போது தரைவழி தாக்குதலையும் விரிவுப்படுத்தவுள்ளது. இதற்காக அதிக தரைவழிப் படைகள் களமிறக்கப்படவுள்ளன.

காசாவில் ஒரு வார காலப்பகுதிக்குள் 460 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் புதிய நடவடிக்கை, உயிரிழப்புகளை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

அத்துடன், காசாவுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் பஞ்சத்தாலும் மக்கள் செத்து மடியும் அவலம் உருவாகியுள்ளது.

அதேவேளை, காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முன்னெடுத்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றி செயற்பட வேண்டும் சர்வதேச நாடுகள் வலியுறுத்திவருகின்றன.

Related Articles

Latest Articles