நீதி வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதி!

இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்தகால ஆட்சியாளர்களைப்போலவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

‘இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனவர்.

கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதியை எதிர்பார்த்துள்ளனர். எனினும், இனவழிப்புக்கான நீதி என்பது மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில்கீழ் நீதி கிடைக்குமா என்பதிலும் நம்பிக்கை இல்லை.

இன அழிப்புக்கான நீதி வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக உள்ளது. அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும். மே 18 ஆம் திகதி எமது மக்கள் தன்னெழுச்சியாகவே நினைவேந்தல் நடத்தினர். இதன் பின்னணியில் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லை. நீதி வேண்டும் என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.” எனவும் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

கனடாவில் இனவழிப்பு நினைவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கனடா தூதுவரை அழைத்து இது தொடர்பில் இலங்கை விளக்கமளித்துள்ளது. இவ்வாறான விடயங்களை செய்வதைவிடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

யுத்த வெற்றியை கொண்டாடுவதற்கு ஜனாதிபதி மே 19 ஆம் திகதி சென்றிருந்தார். கடந்த ஆட்சிகளின்போதுதான் தற்போதும் வெற்றி கொண்டாட்டம் இடம்பெறுகின்றது. கடந்த தேர்தலில் பாடம் புகட்டிய தமிழ் மக்கள், இனிவரும் காலங்களிலும் சிறந்த பதிலை வழங்குவார்கள்.” -என சாணக்கியன் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles