16 வருடங்களுக்குப் பிறகு தீவிரமடையும் சிக்குன்குனியா

சிக்குன்குனியா வைரஸ் நோய் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாரியளவில் பரவி வருவதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில், இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ், இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது.

இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து பாரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

Related Articles

Latest Articles