சி.வி.கே. – டக்ளஸ் இன்று சந்திப்பு!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது எனத் தெரியவருகின்றது.

ஈ.பி.டி.பி – தமிழரசுக் கட்சி சந்திப்பு தொடர்பில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி..வி.கே சிவஞானமும் நேற்றுமுன்தினம் என்னுடன் தொலைபேசியில் தடர்பாடினார்.  இன்று மாலை அவர்களுடன் சந்தித்துப்  பேசவுள்ளோம்.

மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஷ் என்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்தார். இன்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவரோடு கலந்துரையாடவுள்ளமையால், சந்திப்பின் பின்னர் இது பற்றி யோசிக்கலாம் என அவரிடம் தெரிவித்தேன்.” – என்றேன்.

Related Articles

Latest Articles