ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கிறது பாகிஸ்தான்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் 270 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த செலவினம் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

 

“ கடந்த 2023-ம் ஆண்டிலேயே கடனை திருப்பிச் செலுத்த தவறும் அபாயத்தை பாகிஸ்தான் கொண்டிருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் அதிகரிக்கும். அதேசமயம் பணவீக்கம் 7.5 சதவீதமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார.

Related Articles

Latest Articles