நுவரெலியா மாநகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி!

நுவரெலியா மாநகரசபையில் என்.பி.பி. ஆட்சியமைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,

அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா சபையின் பிரதி மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.

மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக உபாலி வனிகசேகர, சுயேட்சை குழு சார்பாக அஹகம ராமநாயகலாகே அஜித் குமார ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 14 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 14 வாக்குகளை பெற்று சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட உபாலி வனிகசேகர தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட சுயேட்சை குழு உறுப்பினர் அஹகம ராமநாயகலாகே அஜித் குமார 11 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

இதே இந்த மாநகர சபைக்கு பிரதி மேயர் தெரிவு செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வீரமலை இளையராஜாவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக சிவன்ஜோதி யோகராஜாவும் போட்டியிட்டனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சிவன்ஜோதி யோகராஜா 14 வாக்குகளை பெற்று பிரதி மேயராக தெரிவானர். இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வீரமலை இளையராஜா அவர்கள் 11 வாக்குகளே வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

1. நுவரெலியா மாநகர சபை 25 உறுப்பினர்களை கொண்டது.

• தேசிய மக்கள் சக்தி – 12

• ஐக்கிய மக்கள் சக்தி – 04

• ஐக்கிய தேசியக் கட்சி – 03

• சுயேட்சை – 03

• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02

• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 01

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles