கொத்து குண்டுகளைவீசி ஈரான் தாக்குதல்!

இஸ்​ரேல் – ஈரான் போர் இன்று 8-ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்​ரேல் மீது ஈரான் நேற்று கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது.

இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு நகரங்​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சேதமடைந்​தன.

அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்​படுத்​து​வ​தாக கூறி, அந்​நாட்​டின் மீது இஸ்​ரேல் தாக்​குதலை தொடங்​கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது.

இரு நாடு​கள் இடையி​லான போர் நேற்று 8-வது நாளாக நீடித்​தது. இந்த தாக்​குதல்​களால் இருதரப்​பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்​பட்​டுள்​ளது.

ஈரானில் ராணுவ உயர் அதி​காரி​கள், மூத்த அணு விஞ்​ஞானிகள் உட்பட 224 பேர் உயி​ரிழந்​தனர். இஸ்​ரேலில் 25 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், இஸ்​ரேலின் மத்​திய பகு​தி​களில் மக்​கள் அதி​கம் வசிக்​கும் இடங்​களை குறி​வைத்து ஈரான் கடந்த 19-ம் திகதி கொத்து குண்​டு​களை வீசி​ய​தாக, அமெரிக்​கா​வில் உள்ள இஸ்​ரேல் தூதரகம் தெரி​வித்​தது.

சுமார் 8 கி.மீ. சுற்​றளவு வரை கடும் சேதத்தை ஏற்​படுத்​தக்​கூடிய கொத்து குண்​டு​களை இஸ்​ரேல் மீது ஈரான் பயன்​படுத்​து​வது இதுவே முதல் முறையெனக் கூறப்படுகின்றது.

ஈரான் வீசிய கொத்து குண்​டு​களால், இஸ்​ரேல் தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு பகு​தி​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சரிந்து கிடப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இஸ்​ரேலின் துறை​முக நகர​மான ஹைபா மற்​றும் டான் மாவட்​டங்​கள் உட்பட பல பகு​தி​கள் மீது ஈரான் நேற்று சரமாரி​யாக ஏவு​கணை​களை வீசி​யது.

இவ்வாறு போர் நீடித்து வரும் நிலை​யில், ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலின் அவசர கூட்​டத்தை கூட்​டு​மாறு ஈரான் மற்​றும் அதற்கு ஆதரவு தெரிவிக்​கும் ரஷ்​யா, சீனா மற்​றும் பாகிஸ்​தான் ஆகிய நாடு​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளன. இதனால், ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலின் 2-வது அவசர கூட்​டம் விரை​வில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles