அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது
ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் ரைசிங் லயனின் அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது.
இதன் மூலமாக ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளோம்.
ஈரான் வான்வெளியில் முழு வான் கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, ஈரான் அரசுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினோம். எங்கள் இலக்குகளை அடைந்ததை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.