இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் ஏற்பட்டிருந்த போர் 12 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்னும் முழுமையாக தணியவில்லை.
இரு நாடுகளும் போர் நிறுத்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையில் போரில் தங்களுக்கே வெற்றியென இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மாறி மாறி கூறிவருகின்றன. ஈரானில் வெற்றிக் கொண்டாட்டங்கள்கூட நடத்தப்பட்டுள்ளன.
மறுபுறத்தில் மீண்டும் போர் ஏற்பட்டால்கூட தாக்குதல்களை நடத்துவதற்கு இரு தரப்புகளுமே தயார் நிலையில் உள்ளன எனக் கூறப்படுகின்றது.