பிரதமர் பதவி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜித்த!

‘பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித பிரச்சினையும் கிடையாது. அப்பதவியில் ஹரினி அமரசூரிய தொடர்வார்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பிரதமராக விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளார் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘ அரசியலில் எமக்கு தனிப்பட்ட கனவுகள் கிடையாது. பதவிகளுக்காக ஆசைப்படுவதும் இல்லை.

பிரதமர் பதவி தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கருத்தாடலும் இடம்பெறவில்லை. எமது அனைத்து தரப்பினதும் ஆதரவுடன்தான் பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டார்.

அரசியல் ரீதியல் வங்குரோத்து அடைந்துள்ள எதிரணிகளே போலி தகவல்களை பரப்பிவருகின்றன.” – என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles