படகு கவிழ்ந்து நால்வர் பலி: 38 பேர் மாயம்: இந்தோனேசியாவில் சோகம்!

 

இந்தோனேசியா, பாலி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள் இருந்துள்ளனர்.

விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Related Articles

Latest Articles