பிரிக்ஸ் கட்டமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

 

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,

“ பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவோர்க்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

எனினும், எந்த மாதிரியான செயல்களை , முடிவுகளை அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்று தான் கருதுகிறார் என ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை.

பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் அங்கம் வகிக்கின்றன.
பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. இன்றும் மாநாடு நடைபெறுகின்றது.

இந்நிலையில், பிரிக்ஸ் தலைவர்கள் இணைந்து ரியோ டி ஜெனிரோ பிரகடனத்தை வெளியிட்டனர். அதில், கட்டற்ற வரிவிதிப்பு சர்வதேச வர்த்தகத்துக்கு ஆபத்தானது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பிரகடனத்தில் வரி விதிப்புடன் தொடர்புபடுத்தி அமெரிக்கா, டொனால்டு ட்ரம்ப் என்று வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Related Articles

Latest Articles