வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி நானுஓயாவில் போராட்டம்!

வீதியை புனரமைத்து தருமாறுகோரி நானுஓயா , ரதெல்ல கீழ் பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நானுஓயா ரதெல்ல கீழ் பிரிவு தோட்டத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இத்தோட்டத்தில் இருந்து தலவாக்கலை செல்லும்‌ இரண்டு கிலோமீட்டர் தூரம்கொண்ட வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

இந்நிலையில் இப்பாதையை உடனடியாக சீரமைத்து தருமாறு கோரி இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கவனீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கு மேற்பட்ட மக்கள் இதில் ஈடுபட்டனர்.

கடந்த அரசாங்கத்தில் 2020 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை ஆரம்பிப்பதற் கு அடிக்கல் நடப்பட்டது. வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையில் கைவிடப்பட்டுள்ளது.

எனவே, இப்பாதையினை உடனடியாக புரனமைப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles