மஹிந்த கிழட்டு மைனாவா?அவரின் அருமை தற்போது புரிகிறது!

தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளால் மஹிந்த ராஜபக்சவுக்கான மவுசு எகிறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அன்றும், இன்றும், என்றும் எனது அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்சதான். சிலிண்டரில் நான் வாக்குகேட்டவேளையிலும் இதனை பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தேன். மஹிந்தபோன்றதொரு அரசியல் தலைவர் மீள உருவாகப்போவதில்லை. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மஹிந்தவுக்குரிய பெறுமதி அதிகரித்துள்ளது.

எமது ஆட்சி இருந்திருந்தால் மஹிந்தவை கிழட்டு மைனா எனவும், நாமலை குட்டி மைனா எனவும் தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்திருப்பார்கள். அன்று எம்மை இப்படி விமர்சித்தவர்களுக்கு மக்கள் இன்று சமூகவலைத்தளங்களில் சிறப்பான பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆட்சியை வழங்கியது நல்லது. இப்போது யதார்த்தம் புரிந்திருக்கும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு எமது கட்சி ஆதரவாளர்களே காரணம். அவர்களும் உண்மையை புரிந்துகொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவை விரைவில் களுத்துறைக்கு அழைத்துவருவேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles