குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்

குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்தநிலையில், செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி இந்தக் கூட்டத்துக்குச் சென்றனர்.

இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் தாம் குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறிப் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles