” வரலாற்றை அழித்தால் எதிர்காலத்தை இலகுவில் இல்லாது செய்துவிடலாம்.இதுதான் மேற்குலகின் நிகழ்ச்சி நிரல். இதற்கமையவே தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாம் எமது பாடசாலை காலத்தில் வரலாறு படித்தோம். ஆனால் தற்போதுள்ள மாணவர்களுக்கு வரலாறு கற்பிப்பது இந்த அரசாங்கத்துக்கு சிக்கலாக இருக்கும். ஏனெனில் ஜே.வி.பியின் வரலாறு சரியில்லை. அவ்வாறு வரலாற்றை கற்பித்தால் தமது கட்சியின் வரலாறும் தெரியவரும் என அஞ்சுகின்றனர்.
வரலாற்றை மறக்கடித்தால் எதிர்காலத்தை அழிப்பது இலகு. மேற்குலக நிகழச்;சி நிரல் இதுதான். மேற்குலகம் அன்று இலங்கையை ஆக்கிரமித்து எமது நாட்டு வரலாற்றை அழித்தன. தொல்லியல் அடையாளங்களை எடுத்துச்சென்றன. எமது வரலாற்றை அழிப்பதே இதன் நோக்கம்.
தற்போதைய அரசாங்கமும் தமது தவறான வரலாற்றை மூடி மறைப்பதற்காக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு மறக்கவைக்க முற்படுகின்றதுபோல் தெரிகின்றது.” – என்றார்.