நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியென்பதை புலனாய்வு பிரிவு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாமல்தான் அடுத்த ஜனாதிபதியென்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தெரியும். புலனாய்வு பிரிவுகள் இது தொடர்பில் அனைத்து அறிக்கைகளையும் கையளித்துள்ளன.
தெற்காசியாவில் உருவாகும் இளம் தலைவராக நாமல் இருப்பார். வெளிநாடுகள் எம்முடன் பேச்சு நடத்துகின்றன. தூதரகங்களுக்கு சென்றால்கூட அடுத்த தலைவர் என்றே நாமலை விளிக்கின்றனர்.” – என்றார்.
அதேவேளை, நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவது சவால்மிக்க விடயமாக அமையாது என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.










