வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“இந்த விடயத்தை நான் முறையாக கட்சிக்கு அறிவிக்கவுள்ளேன். எனினும், எனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது. என்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரைமுதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால் கட்சியின் முடிவுக்குநான் முழுமையாகக் கட்டுப்படுவேன்.”
– என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் பின்னர் அவர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.