“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு அவசியம்”

” போரை முடிவுக்குகொண்டுவந்த மஹிந்த ராஜபக்சமீது தமிழ் டயஸ்போராக்கள் சிலர் இன்னமும் வைராக்கியத்துடனேயே உள்ளனர். இதனால் அவரை பழிவாங்க முற்படக்கூடும். எனவே, அவர் உட்பட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு அவசியம்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் எம்.பி. சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி பதவியை வகிப்பவர் துணிவுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிலும் இந்த நடைமுறை உள்ளது. எனவே, ஜனாதிபதியால் எடுக்கப்படும் முடிவு 90 வீதமானோருக்கு சாதகமாக இருக்கலாம். 10 வீதமானோர் அதனை எதிர்க்கலாம்.

எனவே, அந்த 10 சதவீதமானோர், ஜனாதிபதி ஓய்வுபெற்ற பின்னர் அவரை பழிவாங்க முற்படக்கூடும். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்கள் வழங்கப்படுகின்றன. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர். அவரை பழிவாங்கும் நோக்கில் சில தமிழ் டயஸ்போராக்கள் செயற்படலாம். உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வைத்து மஹிந்தவை பழிவாங்கக்கூடும். ஆகவே, மஹிந்தவுக்கு பாதுகாப்பு அவசியம். வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் பாதுகாப்பாகும்.” – என்றார் சமன் ரத்னபிரிய.

Related Articles

Latest Articles