பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் இன்று (11) கையளிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்படவுள்ள குறித்த பிரேரணைக்கு எதிரணியிலுள்ள ஏனைய கட்சிகளும் ஆதரவளித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக இடம்பெற வேண்டுமானால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தின. எனினும், அவர் பதவி விலகவில்லை. இந்நிலையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்தபோது அருண ஜயசேகர, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டார் என எதிரணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மைபலம் எதிரணி வசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.