25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி! தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் உயிரிழப்பு

 

நண்பியிடம் 25 பவுண் நகையைக் கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே நேற்று சனிக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மேற்படி பெண்ணின் நண்பி ஒருவர் தனது மகனின் திருமணத்துக்குச் செலவழிப்பதற்குப் பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை அந்தப் பெண்ணிடம் வாங்கியுள்ளார். இருப்பினும் அவர் அந்த நகையைத் திருப்பிக் கொடுக்காமல் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையும் அந்த நகையை நண்பியிடம் மேற்படி கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இளவாலைப் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.

Related Articles

Latest Articles