அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி!

கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது.

இந்தியாவின் பாது​காப்​புக்​காக பல வகை ஏவு​கணை​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம்​ உரு​வாக்கி வரு​கிறது.

அவற்​றில் மிக​வும் சக்தி வாய்ந்​தது அக்​னி-5 ஏவு​கணை. அணு ஆயுதங்​களு​டன் 5,000 கிலோ மீற்றர் தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது.

இந்த ஏவு​கணை ஒடி​சா​வின் சண்​டிப்​பூரில் உள்ள பரிசோதனை மையத்​தில் நேற்று முன்​தினம் பரிசோ​திக்​கப்​பட்​டது. அப்​போது ஏவு​கணை​யின் அனைத்து தொழில்​நுட்ப செயல்​பாடு​களும் சரி​பார்க்​கப்​பட்​டன.

இந்த சோதனை வெற்​றிகர​மாக நடை​பெற்​ற​தாக பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​தது. அடுத்​த​தாக 7,500 கிலோ மிற்றர் தூர​முள்ள இலக்கை தாக்​கும் வகையில் அக்னி ஏவு​கணையை மேம்​படுத்​தும் முயற்​சி​யில் டிஆர்​டிஓ இறங்​கி​யுள்​ளது.

Related Articles

Latest Articles