புசல்லாவை டெல்டா தோட்டத்தில் குளோரின் வாயு கசிவு: 30 பேர் பாதிப்பு!
புசல்லாவை, டெல்டா தோட்டத்திலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உரித்தான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவு காரணமாக 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் புசல்லாவை, வகுவப்பிட்டிய மற்றும் கம்பளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் கொழுந்து கொய்துகொண்டிருந்த 29 தொழிலாளர்களும்,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர் ஒருவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சுத்திகரிப்பு நிலையத்தின் குளோரின் குழாய் அமைப்பிலிருந்து கசிந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் சிலர் மயங்கி விழுந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
வாயு கசிவு காரணமாக அப்பகுதியில் இருந்த தேயிலைச் செடிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.










