பிரான்ஸிலும் போராட்டம் வெடிப்பு: 200 பேர் கைது!

 

பிரான்ஸ் நாட்​டில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலிஸார் கைது செய்​துள்​ளனர்.

பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் பி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலை​மையி​லான அரசு கவிழ்ந்​தது.

பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் மொத்​தம் 577 உறுப்​பினர்​கள் உள்ள நிலை​யில், நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பேரூக்கு எதி​ராக 364 உறுப்​பினர்​களும், ஆதர​வாக 194 உறுப்​பினர்​களும் வாக்​களித்​தனர்​.19 உறுப்​பினர்​கள் வாக்​கெடுப்பை புறக்​கணித்​த​னர்.

இதன்​மூலம் கடந்த 12 மாதங்​களில் 4-வது பிரதமரை தேர்ந்​தெடுக்​கும் சூழலுக்கு ஜனாதிபதி இம்​மானுவேல் மேக்​ரான் தள்​ளப்​பட்​டுள்​ளார்.

இதையடுத்து புதிய பிரதம​ராக அந்​நாட்​டின் பாது​காப்​புத்​துறை அமைச்​சர் லெகர்​னுவை ஜனாதிபதி இம்​மானுவேல் மேக்​ரான் நியமித்​துள்​ளார். இந்​நிலை​யில் பிரான்​ஸில் புதிய அரசு பதவி​யேற்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டங்​கள் வெடித்​துள்​ளன.

இதையடுத்து முக்​கிய பகு​தி​களில் மக்​கள் கூட்​ட​மாக கூடு​வதை தடுத்த பொலிஸார், முன்​னெச்​சரிக்கை அறி​விப்பை வெளி​யிட்டு கண்​ணீர் புகை குண்​டு​களை வீசினர். இதனிடையே, நாட்​டின் மேற்கு பகுதி நகர​மான ரென்ஸ் பேருந்து ஒன்​றுக்கு போராட்​டக்​காரர்​கள் தீ வைத்​தனர். பல்​வேறு இடங்​களில் போராட்​டம் வெடித்​துள்​ள​தால் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

பிரான்ஸ் நாடு முழு​வதும் பாது​காப்பு பணி​யில் 80 ஆயிரம் பொலிஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக அந்​நாட்​டின் உள்​துறை அமைச்​சர் புருனோ தெரி​வித்​துள்​ளார்.

போராட்​டத்​துக்கு யாரும் தலைமை தாங்​காமலேயே நாடு முழு​வதும் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் பிரான்ஸ் நாட்​டில் பதற்றமான சூழல் நிலவி வரு​கிறது. போ​ராட்​டங்​களில் ஈடு​பட்​ட​தாக இது​வரை 200 பேரை போலீ​ஸார்​ கைது செய்​துள்​ளனர்​.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles