சாவி கொத்தை 7 நாட்களுக்குள் கையளிப்பார் மஹிந்த!

” தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இந்நாளில் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்.”- என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

‘ சட்டத்துக்கு மதிப்பளித்து விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். இன்னும் ஒரு வார காலத்துக்குள் வீடு அதிகாரப்பூர்வமாக மீள கையளிக்கப்படும்.

30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய தலை வருக்கு அரசாங்கம் இப்படி நன்றிகடன் செலுத்துகின்றது என்பது மக்களுக்கு தற்போது புரிந்திருக்கும். காட்டில் இருந்தாலும், நகரில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்குரிய பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும். ” – எனவும் மனோஜ கமகே குறிப்பிட்டார்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச நேற்று அரச மாளிகையில் இருந்து வெளியேறினாலும், அரசுக்குரிய சொத்துகளை கையளிப்பதற்கு ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles