நேபாளத்தை ஆளப்போவது யார்? 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சு!

 

நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்பில் சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

நேபாளத்தில் அண்​மை​யில் “நெப்போ பேபி” என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின.

அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள் மற்றும் பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர்.

இதன் எதிர்​விளை​வாக பேஸ்​புக், யூ டியூப் உள்​ளிட்ட 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் திகதி முடக்​கியது. இதனால் நேபாளம் முழு​வதும் போராட்​டம் தீவிரமடைந்​தது.
அந்த நாட்டு நாடாளு​மன்​றம், உச்ச நீதி​மன்​றம், அரசு அலு​வல​கங்​கள், பிரதமர், ஜனாதிபதி, மூத்த அமைச்​சர்​களின் வீடு​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. இது​வரை 34 பேர் உயி​ரிழந்தனர்.

போ​ராட்​டம் வலு​வடைந்​த​தால் ஜனாதிபதி ராம் சந்​திர பவு​டால், பிரதமர் சர்மா ஒலி அடுத்​தடுத்து பதவி வில​கினர்.

நாட்​டின் பாது​காப்பை ராணுவம் ஏற்​று, நேபாளம் முழு​வதும் ஊரடங்கை அமுல்​படுத்​தி​யது. இதன்​ காரண​மாக நேபாளத்​தில் அமைதி திரும்பி வரு​கிறது.

புதிய பிரதமரை தெரிவு செய்​வது தொடர்​பாக 12-க்​கும் மேற்​பட்ட போராட்ட குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். இந்த பேச்​சு​ நேற்​றும் நீடித்​தது.

நேபாள உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்​கி, நேபாள மின்​சார ஆணை​யத்​தின் முன்​னாள் தலை​வர் குல் மேன் கிசிங், காத்​மாண்டு மேயர் பலேந்​திர ஷா, தரன் நகர மேயர் ஹர்கா சம்​பாங் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் முன்​மொழியப்​பட்டு உள்​ளன.

இதில் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்​கி, மின்​சார ஆணைய முன்​னாள் தலை​வர் குல் மேன் கிசிங் ஆகியோர் முன்​வரிசை​யில் உள்​ளனர்.
நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வுக்கு அருகே சுசிவபுரியில் உள்ள ராணுவ தளத்​தில் பதவி வில​கிய பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள் பாது​காப்​பாக தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர்.

போராட்​டங்​களின்​போது தலைநகர் காத்​மாண்டு உட்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள சிறை​களில் இருந்து 13,000 கைதி​கள் தப்​பியோடி விட்​டனர். இதில் சுமார் 1,400 பேர் மட்​டும் பிடிபட்டு உள்​ளனர். இந்த சூழலில் நேபாளத்​தில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைய முயன்ற 60 கைதி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles