நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் மீண்டும் எழுந்து நிற்பேன்: மஹிந்த கர்ஜனை!

“சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றைத் தாய்நாட்டுக்கு யாரேனும்துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

தனக்கு அரசியல் அச்சுறுத்தல்கள் நன்கு பழக்கப்பட் டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்காலையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

” தனிப்பட்ட பழிவாங்கலை நோக்க மாகக் கொண்ட, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை இல்லாத அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக, அதன் விளைவாகஎழுந்த பல சம்பவங்களின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நான் ஒருபோதும் வருந்தமாட்டேன். இந்தத் தாய்நாட்டில் சுதந்திரமாகச்சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன்.” எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இருண்ட காலங்களில் நிலவிய அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணா மல்போனவர்களுக்காக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணா மல்போனவர்கள், மனித உரிமைகள் மீறல்களுக்காக சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரி ‘வழக்கறிஞர் மஹிந்தராஜபக்ஷ, தலைவர் – மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன்,தங்கல்லை” என்பதை எனது சகோதரர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

பாத யாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரச எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழி முறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்க ளுக்கு எடுத்துக் காட்டுகள்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஓர் அறிக்கை வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரியவந்தது.

தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைப்பது குறித்து நான் பதிலளிக்க வில்லை. ஆனால், நான் வாழும் வரை,நாம் அனைவரும் வாழும் அல்லது ஒருநாள் அடக்கம் செய்யப்படும் சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற் றைத் தாய்நாட்டுக்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்க ளுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற் பேன் என்று நான் அறிவிக்கின்றேன்.

அன்று தேவைப்பட்டால் எனக்குத் தோள் கொடுக்க இந்த நாட்டில் மகா சங்கத்தினரை உள்ளடக்கிய அன்பு மக்கள் இருக்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.” என மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles