நேபாளம் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் திகதியும் அறிவிப்பு!

நாடாளுமன்றம் நேற்று இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்து உள்ளார்.

நேபாள போராட்டம் குறித்த விவரம் நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்தது.இதனால் பெரும் கொந்தளிப்புக்கு ஆளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடஙகிய ‘ஜென் சி’ தலைமுறையினர் காட்மாண்டுவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடினர்.

Related Articles

Latest Articles