ஒதுக்கீட்டு சட்டமூலம் செப். 26 சபையில் முன்வைப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் செப்டம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது வரவு- செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்.

அதன்பின்னர் வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் சபையில் முன்வைக்கப்பட்டு, அவரின் பாதீட்டு உரை இடம்பெறும். இது இரண்டாம் வாசிப்பாகக் கருதப்படும்.

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 8 முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பாதீட்டில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதிவரை நடைபெறும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் வழமையாக 9.30 மணிக்கே கூடும். எனினும், பாதீட்டு கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் காலை 9 மணிக்கு சபையை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles