புசல்லாவை, வகுவப்பிட்டிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) பிற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையொன்றை அண்மித்த பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடே கலைந்து, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளது.
ஐந்து பாடசாலை மாணவர்கள், மூன்று முதியவர்கள் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைகளுக்கு பின்னர் 5 பேர் வீடு திரும்பியுள்ளனர். முதியவர்கள் மூவர் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.