தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில்,
“மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னால் பேச முடியவில்லை
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. இனிமேல் இது நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்.” என்று குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார்கள்? என்று நீங்கள் கேட்பதற்கு எல்லாம் நான் என்னை உட்படுத்த தயாராக இல்லை” எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.
‘கேட்ட இடத்தை தரவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே..?’ என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
அதேவேளை, சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் மற்றும் கூட்ட ஏற்பாளர்கள்மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.
