விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்: வீடு, கட்சி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

 

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், விஜய் சுற்​றுப்​பயணம் தற்​காலிக​மாக தள்​ளிவைக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும், சென்​னை​யில் விஜய் வீட்​டுக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

கரூரில் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், நேற்​று​முன் தினம் இரவு 11 மணிக்கு அவர் சென்னை திரும்​பி​னார். அவருக்கு ஆதர​வாக நேற்று முன்​தினம் இரவு ஏராள​மான தொண்​டர்​கள் குவிந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

மேலும், அவருக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து வீட்​டின் முன் போராட்​டம் நடத்​து​வதற்​காக பல்​வேறு அமைப்​பு​களும் வரவுள்ளதாக கிடைத்த தகவலை​யடுத்​து, கூடு​தல் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது. இந்​நிலை​யில், நேற்று விஜய் வீட்டை முற்​றுகை​யிடு​வதற்காக வந்த மாணவர் அமைப்​பினர் 20-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் தடுத்து நிறுத்தி கைது செய்​தனர். மேலும், விஜய் வீடு அமைந்​திருக்​கும் பகு​தி​யில் தடுப்​பு​கள் அமைத்​து, அவ்​வழியே வரு​வோரை தீவிர விசா​ரணைக்​குப் பின்​னரே அனு​ம​திக்​கின்​றனர்.

இதற்​கிடை​யில், விஜய் வீட்​டுக்கு மத்​திய பாது​காப்பு படை வீரர்​கள் நேற்று வந்​தனர். ஏற்​க​னவே விஜய்க்கு ஒய் பிரிவு பாது​காப்பு வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், கூடு​தலாக சிஆர்​பிஎஃப் வீரர்​களும் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இதே​போல, பனையூரில் விஜய் கட்சி அலு​வல​கத்​துக்​கும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூர் சம்​பவத்​தையடுத்து விஜய் தனது சுற்​றுப்​பயணத்தை தற்​காலிக​மாக தள்​ளிவைக்க முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. 2 அல்​லது 3 வாரங்​களுக்கு சுற்​றுப்​பயணத்தை தள்​ளி​வைத்​திருப்​ப​தாக​வும், அதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோ​சனை நடத்தி அறி​விப்பு வெளி​யிட்ட உள்​ள​தாக​வும்​ தவெக வட்​டாரத்​தில்​ கூறப்​படு​கிறது.

Related Articles

Latest Articles