டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே அரசு செயல்படுத்துகிறது: மஹிந்த அணி குற்றச்சாட்டு

டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு டயஸ்போராக்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் உதவி வழங்கின. இது இரகசியமான விடயம் அல்ல.

இலங்கையின் கலாசாரத்தை சீரழிப்பது இத்தரப்புகளின் பிரதான நோக்கமாகும். ஏனெனில் கலாசாரம் சீரழிந்த நாடொன்றை அழிப்பதென்பது மிக எளிது.

எனவே, வெளிநாட்டு சக்திகள் மற்றும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இந்த அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.” – எனவும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles