” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தற்போது நீக்கப்படக்கூடாது.” – என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போது நீக்க வேண்டாம் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏனெனில் இந்நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் நாட்டின் இருப்பு ஆட்டம் காணக்கூடும்.
எனினும், ஏதேனும் ஒரு நாளில் இரண்டுக்கு மேற்பட்ட வலுவான கட்சிகள் இந்நாட்டில் உதயமானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றி பரிசீலித்து பார்க்கலாம்.” – எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.