யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் 24 வயதான குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.