தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
” ஜனாதிபதி, எனக்கு எழுதிய கடிதத்தில், “இந்த #மலையக #அதிகாரசபை பற்றிய (under review) மீளாய்வு நடைபெறுகிறது” என பதில் வழங்கி விட்ட பிறகும், ஏன் சில மலையக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் “அப்படி எதுவுமே, இல்லை” என்பது போல வெட்கமில்லாமல் பொய் பேச வேண்டும்?
இது பற்றி எதுவுமே தெரியாமல், அரசாங்கத்துக்கு உள்ளே இந்த மலையக எம்பீக்கள் “சும்மாவே” உட்கார்ந்து இருக்கிறார்கள், போலும்!
“இது தொடர்பான, மேல் நடவடிக்கைகள் பற்றி எனக்கு அறிவிப்பதாகவும்”, ஜனாதிபதி தனது கடிதத்தில் எனக்கு உறுதி கூறியுள்ளார்.
எதுவாயினும், “எக்காரணம் கொண்டும் இந்த சபையை மூடி விட வேண்டாம்” என நான் மீண்டும் பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினேன்.
குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் #பிரபாத்_சந்திரகீர்த்தி, மேலதிக செயலாளர் #தீப்திகா_குணரத்ன, சட்ட அதிகாரி #தில்ஷானி_பண்டார ஆகிய மூன்று அதிகாரிகள் இனவாத கண்ணோட்டத்தில் இந்த சபையை மூடி விடுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என பெயர் குறிப்பிட்டும் சபையில் கூறினேன்.
“இவர்கள் என்ன, அரசாங்க அமைச்சர்களை விட பலமானவர்களா? நாம் உருவாக்கும் சட்டத்தை அமுல் செய்யவே அதிகாரிகள் இருக்கிறார்கள். சட்டம், கொள்கைகளை உருவாக்குவது, பாராளுமன்றம்” என்றும் கூறினேன்.
“தமுசெலா எதனட வெலா பம்பு-கஹன்ன எபா” என்றும் சுத்த சிங்களத்தில் சொன்னேன்.










