( ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பண்டாரவளையில் இன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு)
🛑 வருட இறுதிக்குள் சம்பள உயர்வு :
🛑 மலையக மக்களும் சம உரிமையுடைய பிரஜைகள்!
🛑 மலையக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வழிவகைகள் மற்றும் அவர்களுக்கு நிம்மதியானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும் பாரிய கடப்பாடு அரசாங்கத்தக்கு உள்ளது.
🛑 ஒரு அங்குலேமேனும் காணி உரிமை அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்குரிய வேலைத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
🛑 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும். 1,750 ரூபா நாளாந்த சம்பளம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.
🛑 இவ்வருடத்துக்குள் இந்த சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
🛑 தோட்டங்களை சூழ உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது குறித்தும், சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்குரிய சுகாதாரம் அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை கம்பனிகளிடம் வழங்க தயாரில்லை.
🛑 மலையக மக்களுக்குரிய சமூக அந்தஸ்த்து, கலாசார உரிமை, அவர்களுக்குரிய அடையாளம் என்பன காக்கப்படும். அனைத்து இன மக்களுக்கும் இது பொருந்தும்.
🛑 மலையக மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தனர். இறந்த பின்பும் இம்மண்ணுக்கு உரமாகினர். அவர்கள் இரண்டாம் தர பிரஜைகள் அல்லர். அவர்களுக்கு சம உரிமை உள்ளது.
🛑 பாரம்பரிய அரசியல் முகாம்களை நிராகரித்து, புதிய நம்பிக்கையுடன்தான் தேசிய மக்கள் சக்திக்கு மலைய மக்கள் வாக்களித்தனர். மக்கள் மத்தியில் இருந்து மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றம் வந்தனர். இது இலங்கை அரசியலில் மிக முக்கிய மாற்றமாகும். எங்கள்மீது வைத்த நம்பிக்கையே இது. அந்த நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம். அதற்கு எதிராக செயற்படமாட்டோம்.
ஆர்.சனத்










