சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் அமரர் வேலாயுதத்தின் 10 ஆவது நினைவு தினம் நாளை!

மலையகத்தில் மூத்த தொழிற்சங்க வாதிகளில் ஒருவரான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை (13) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு பதுளை மாவட்டத்தில் நினைவஞ்சலிக் கூட்டமும், பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பொது இடங்களில் மரம் நடும் நிகழ்வும் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்குள் 23 ஆயிரத்து 932 மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சில பெருந்தோட்டப் பாடசாலைகளில் சதுரங்க போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி என்பனவும் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகள் இம்மாத இறுதியிலும், அடுத்த மாதம் ஆரம்பத்திலும் இடம்பெறவுள்ளன.

தொழிற்சங்க தலைவர், ஊவா மாகாணசபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் என முக்கிய பதவிகளை வகித்து, அதன்மூலம் மலையக மக்களுக்கு பல சேவைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே பசுமைபூமி காணி உரிமை திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles