மாகாணசபைகளுக்குரிய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் வெற்றிபெற முடியும் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
அவ்வாறு நம்பிக்கை இருப்பதால்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான்கு எம்.பிக்கள் முன்வந்துள்ளனர் எனவும் ஊடக சந்திப்பொன்றின்போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களும் தேர்தலை எதிர்பார்த்துள்ளனர். இதனால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்படும் எனவும் அஜித் பி பெரேரா எம்.பி. குறிப்பிட்டார்.