பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த குற்றவாளியான இஷாரா செல்வந்தி நேபாளத்தில கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சட்டத்தரணிபோல வேடமிட்டுவந்த நபரொருவரே துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்தார். சம்பவ தினத்தன்றே அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், சட்டப்புத்தகத்துக்குள் துப்பாக்கியை மறைத்து, அதனை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவந்த இஷாரா செவ்வந்தி தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அவர் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார் என உளவு தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழுவொன்று, நேபாள பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்களை கைது செய்துள்ளது.