பொகவந்தலாவ, பொகவானை தோட்டப் பகுதியில் வீடொன்றில் தொட்டிலில் ஊஞ்சல் ஆடி விளையாடிக்கொண்டிருந்தார் எனக் கூறப்படும் 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 14.10.2025 நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக தொட்டிலொன்று கட்டப்பட்டுள்ளது. அதில் குறித்த சிறுமி ஊஞ்சல் ஆடி விளையாடி கொண்டிருந்த நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில், பேச்சு மூச்சு அற்ற நிலையில் காணப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தனது சகோதரி பேச்சுமூச்சு அற்ற நிலையில் இருப்பதைக் கண்ட சகோதரன், இது பற்றி தெரிவித்து அயலவர்களை அழைத்ததையடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
சிறுமி உயிர்ழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடை மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது .
இதேவேளை சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபூது ஜிந்தக்க தலைமையில் மரணவிசாரனைகள் இடம் பெற்று , சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொட்டிலில் தொங்கி விளையாடியபோது உயிரிழப்பு நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நடந்துள்ளதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
