பாதாள குழுக்களுக்கு பின்னால் இருப்பது யார், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது யார் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” செவ்வந்;தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நல்லது. கைதானவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்துவப்பட வேண்டும்.
இந்த திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு பின்னால் இருப்பது யார், அவர்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு கிடைக்கின்றது என்பது உட்பட அனைத்து தகவல்களையும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம். முன்னாள் கடற்படை தளபதிக்கு நடந்ததுபோல விசாரணை இடம்பெறக்கூடாது.” என்றார் நாமல்.
