ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்துவருகின்றது. மாகாணசபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனு வழங்கும்போது, வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸ் சான்றிதழொன்று பெறப்படும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது பற்றி ஆராயப்படும்.
குற்றவாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்புகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.