மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட காட்மோர் தனியார் தோட்டத்தில் 4 பிரிவுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான சேவை கொடுப்பனவைக் கோரியும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன முறையாக செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தோட்டத்தை புதிய நிர்வாகத்திடம் கையளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். தோட்ட முகாமையாளரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
நிர்வாகத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்










