துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ள வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். அவருக்கு எதிராக ஆறு வழங்குகள் உள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” பாதாளக்குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் மக்கள் பிரதிநிதி என்றபோதிலும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். கொலைகளை நாம் அனுமதிப்பதில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை இடம்பெறுகின்றது.”எனவும் அமைச்சர் கூறினார்.










