அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் தென்கொரியா வரவுள்ள நிலையில், வடகொரியா அதி நவீன ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மூங் ஆகியோரை சந்தித்து டிரம்ப் பேச்சு நடத்துவார் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என தென் கொரியா ராணுவம் முறைப்பாடு செய்துள்ளது.