கனடாமீது ட்ரம்ப் மீண்டும் வரிப்போர் தொடுப்பு!

அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து வெளியான விளம்பரத்தின் எதிரொலியாக, கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார்.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்தார்.

இதையடுத்து, கனடாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வகையில், தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது.

மொத்தம், 60 வினாடிகள் உள்ள இந்த விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்டு ரீகன், 1987ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளில் இருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கு ரொனால்டு ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நாளை முதல் நிறுத்தப் போவதாக அம்மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,

“உண்மைகளை அவர்கள் கடுமையாக தவறாக சித்தரித்ததாலும், விரோதமான செயலாலும், கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட 10 சதவீதம் அதிகமாக உயர்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles