யாழ்ப்பாணத்தில் 950 கிலோ கஞ்சா
தீயிட்டு அழிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சான்றுப்பொருளாக நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.
அது தொடர்பான வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து 950 கிலோ கஞ்சாவையும் தீயிட்டு அழிக்க மன்று உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கோம்பயன் மணல் மயான மின் தகன மேடையில் கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் மற்றும் மேலதிக நீதிவான் ஆகிய இருவரின் நேரடிக் கண்காணிப்பில் கஞ்சா அழிக்கப்பட்டது.










