உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்,
” மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார்.
எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர்.என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால் எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். பலமுறை அபார்ஷன் செய்ததுடன், ஆசிட் ஊற்றியும், ஏரியில் தள்ளியும் கொலை செய்ய முயன்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப் படுத்தியதாக அந்தப் பெண் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய பினோலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி – இந்து
